இலங்கை விமான சேவைகள் நிறுவனம் ஒன்றில் விமானியாக பணியாற்றிய இந்திய நாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜோய் ராமன் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள விமானியாவார்.
நீர்கொழும்பு, கனத்தை வீதியில் உள்ள அவரின் வீட்டின் மாடிப்படியில் இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதிக்கு பின்னர் கொலையுண்டவர் அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு வராததை அடுத்து வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்தே இறந்தவரின் சடலம் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உபுல் ராஜகருண விசாரணை நடத்தினார். சம்பவத்தில் இறந்த விமானியின் அறையிலிருந்து இரத்தக் கறை படிந்த கத்தியொன்றும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அறையில் இருந்த தண்ணீர் பாத்திரமொன்றில் இரத்தம் இருந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 commentaires :
Post a Comment