10/07/2009

இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்களில் 95 சதவீதமானோர் தமது சொந்த மண்ணில் மீளக்குடியமரவே விருப்பம்


வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்க் கப்பட்ட நிலையில் புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களில் 95 சதவீதமானவர்கள்தமது சொந்தத் தாயக மண்ணில் மீளக்குடியமரவே விரும்புவதாக இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன்,மீள்குடி யேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து, தமது அமைப்பினால் சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சத்து பத்தா யிரம் அங்கத்தவர்களை உள்ளடக்கிய ஏழாயிரம் குடும்பங்களின் இடம் பெயர்க்க பட்ட விண்ணப்பங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் இதனைத்தெரிவித்தார்.
எம்மால் கோரப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய விண்ணப்பத்த மக்களில் தலா ஒவ்வொரு பத்து குடும்பத்தை சராசரியாக பார்க்கின்ற போது,அவர்களில்; அதிகமானவர்கள் தமது மீள்குடியேற்றம் துரிதப்பட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றனர்.இது ஒரு ஆரோக்கியமான அவதானமாக நாம் பார்க்கின்றோம் என்று அமீன் கூறினார்.அமைச்சரிடம் எனது தலைமையிலான.கவுன்சிலின் உறுப்பனர்களான சட்டத்தரணி யூ.எம்.நஜீம்,ஹில்மி அஹமட்,கலாநிதி யூசுப்.கே.மரைக்கார்,எம்.நஜீம் ஆகியோர் இந்த விண்ணப்பங்களைஅமைச்சர் ரிசாத் பதியுதினிடம் கையளித்தனர்.


0 commentaires :

Post a Comment