ஏ -9 தரை வழியினூடாக நோயா ளிகளை சிகிச்சைக்காகக் கொழும்பு க்கு கொண்டு செல்லும் நடவடி க்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்தார்.
ஏ- 9 தரைப்பாதை ஊடாக வரைய றைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆயினும் தற்போது அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவ ட்டங்களுக்கு மேலதிக சிகிச்சை க்காக அனுப்பி வைக்கும் நடவடிக் கையும் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவினது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சென் ஜோன்ஸ் சேவைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம் நேற்று இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச் சைக்காக கொழும்பு பொது மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
0 commentaires :
Post a Comment