10/21/2009

ரூ. 5000 கோடியில் லிபியாவில் 2500 வீடு


அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் ரூ. 5000 கோடி ரூபா பெறுமதியான 2500 வீடுகளை லிபியாவில் நிர்மாணிக்க உள்ளது.
இதன் மூலம் 2 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-
அரசாங்க நிறுவனமொன்று வெளிநாட்டில் மேற்கொள்ளும் மிகப்பெரிய திட்டம் இது. இந்தத் திட்டம் ஜனாதிபதியின் முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சரவையின் அனுமதிக்காக இந்த யோசனை இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்.
டிசம்பர் மாதத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். மேற்படி வீடமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 7500 வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தமும் இலங்கைக்கு கிடைக்கும்.


0 commentaires :

Post a Comment