10/18/2009

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. -ப.சிதம்பரம்

இலங்கையில் முகாம்களி்ல் உள்ள தமிழர்களை மறு குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.
முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.
எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள்.
இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும்.இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.
இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.


0 commentaires :

Post a Comment