ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.
சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருஹரிணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 பேரே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளம் மூலமாக www.னீoலீnலீts.lk அறிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட மாணவர் சித்தியடைந்துள்ளாரா? இல்லையா என்பதையும் அதனூடாக அறிந்து கொள்ள முடியும்.
மாவட்டங்களுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
கொழும்பு, கம்பஹா, களுத்துறை / கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை தமிழ் மொழிமூலம் 141 புள்ளிகள். சிங்கள மொழிமூலம் - 144 புள்ளிகள்
நுவரெலியா தமிழ் - 137 சிங்களம் 138
வவுனியா - தமிழ் 136 சிங்களம் 136
அம்பாறை - தமிழ் 139 சிங்களம் 139
திருகோணமலை - தமிழ் 138 சிங்களம் 139
புத்தளம் - தமிழ் 137 சிங்களம் 139
அநுராதபுரம் - தமிழ் 138 சிங்களம்139
பொலன்னறுவை - தமிழ் 140 சிங்களம் 139
பதுளை - தமிழ் 138 சிங்களம் 139
மொனராகலை - தமிழ் 135 சிங்களம் 138
மன்னார் - தமிழ் 139
இரத்தினபுரி - தமிழ் 134 சிங்களம் 141
மட்டக்களப்பு - தமிழ் 139 (ள)
0 commentaires :
Post a Comment