9/06/2009

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ திரு. சோமசுந்தரம் புஸ்பராசா அவர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.

அண்மையில் 31-08-2009 அன்று அம்பாறை சொறிக்கல்முனையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ திரு. சோமசுந்தரம் புஸ்பராசா அவர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.
அதாவது குறித்த மாகாண சபை உறுப்பினரின் விட்டுக்குச் சென்ற குண்டர் கும்பல் ஒன்று உறுப்பினரை தாக்க முற்பட்டதுடன், அவருடைய வீட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர்.
அப்போது குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாரும் விசேட அதிரடிப் படையினருமே குண்டர் கும்பலை விரட்டியடித்து மாகான சபை உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர் அங்கு குறித்த நேரத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் சென்றிருக்காவிட்டால் நாங்கள் கிழக்கு மாகாண சபையின் செயல்திறனும் துடிப்புமிக்க ஒரு மாகாண சபை உறுப்பினரை இழக்க நேரிட்டிருக்கும்

0 commentaires :

Post a Comment