கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும் - எ.சி. கிருஷ்னானந்தராஜா
இலங்கைத் திருநாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் உரிமையினை எமது நாட்டின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ச அவர்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இதனை நினைத்து தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் இவ்வேளையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவ்வப்போது அச்சுறுத்தப்படுவதும் கொலை மிரட்டல்களுக்கு உட்படுத்தப்படுவதும் அண்மையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நாடு பெற்றுக் கொண்ட கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துகின்றது.
அண்மையில் 31-08-2009 அன்று அம்பாறை சொறிக்கல்முனையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ திரு. சோமசுந்தரம் புஸ்பராசா அவர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.
அதாவது குறித்த மாகாண சபை உறுப்பினரின் விட்டுக்குச் சென்ற குண்டர் கும்பல் ஒன்று உறுப்பினரை தாக்க முற்பட்டதுடன், அவருடைய வீட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர்.
அப்போது குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாரும் விசேட அதிரடிப் படையினருமே குண்டர் கும்பலை விரட்டியடித்து மாகான சபை உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர் அங்கு குறித்த நேரத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் சென்றிருக்காவிட்டால் நாங்கள் கிழக்கு மாகாண சபையின் செயல்திறனும் துடிப்புமிக்க ஒரு மாகாண சபை உறுப்பினரை இழக்க நேரிட்டிருக்கும்.
எனவே குறித்த இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் உடனடிச் செயற்பாட்டினை நாம் பாராட்டுகின்றோம்.
இருந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய குண்டர் கும்பல் கைது செய்யப்படவில்லை. எனவே இவ்வாறான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஐக்கிய இலங்கையின் அனைத்துப் புகிதியிலும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அதிமேதகு ஜனாதிபதியின் விருப்பத்தினை நடைமுறைப்படுத்த முடியும்.
இதற்கு சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போதுதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பையும், கௌரவத்தையும், அவர்களின் சிறப்புரிமையினையும் பேணிக்கொண்டு, மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தினை ஜனநாயகத்தினை கட்டியெழுப்ப முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.சி. கிருஷ்னானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment