9/13/2009

வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த ஒரு தொகுதி மக்களை கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் சென்று பார்வையிட்டார்


நேற்று(11.09.09) வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த சுமார் 10000பேர் தங்களது சொந்த இடங்களக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தோர்கள் மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்திலும், மட் குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு மடடக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். இம் மக்களை வருவேற்கும் நிகழ்வு மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன், மேயர் சிவகீர்த்தா ,மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீழ் குடியேற்ற இணைப்பதிகாரி அ. செல்வேந்திரன், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் இராணுவ உயர் அதிகாரிகள், கிழக்குப் பராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக்க ஆகிகோர்கலந்து கொண்டார்கள்.இந் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியிவல் உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிக்கண்டு உங்களது சொந்த இடங்களுக்கு வந்திருப்பதனையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவேண்டும். நீங்கள் அனைவரும் எதுவித பிரச்சினைகளுமின்றி உங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கபர்பட உள்ளீர்கள். அதன் பின்னர் கடந்த கால கசப்பான எண்ணங்களையே எண்ணி உங்களது வாழ் நாட்களை வீணடிக்காது, சொந்த வருமானங்களை ஈட்டக் கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து ,உங்களது தனிநபர் வருமானங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இன்று கிழக்கில் நல்ல ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்படடிருக்கின்றது.எனவே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் உரிய பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டு தீர்வினைப் பெறலாம்.. உங்களுக்கரிய ஏனைய சில வசதிகளை மேற் கொள்வதற்காக எமது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உரி நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதற்குரிய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்hர். 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டிருக்பகின்றார்கள்.


0 commentaires :

Post a Comment