மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதுரங்கேணிக்குள காணிப்பிரச்சினை பல நெடுங்காலமாக இருந்துவந்த ஒன்றே 1986ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும் அதேநேரம் அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து அம்மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர், அதேபோல் 1986ம் ஆண்டுக்கு முற்பட்ட காலம் முதல் இற்றைவரைக்கும் அப்பரதேசத்தில் தாங்களே பூர்வீக குடிகளாக இருந்து வருவதாகவும் தமிழ் மக்கள் சார்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவினை எடுக்க முற்பட்டபோதும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தீர்க்கமான முடிவினை எடுக்கமுடியாமல் போனது.இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இது தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையி;ல்15 பேர் கொண்ட விசேட குழு ஒன்றினை நியமித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பித்து அதனூடாக பெறப்படுகின்ற முடிவுகளின் அடிப்படையில் இரு சாராருக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்படும் எனவும், இத்தீர்மானம் எடுக்கும் வரை எவரும் குறித்த காணி தொடர்பான பிரச்சனைகளில் தலையிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் பசீர் சேகுதாவுத், மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம், மாசிலாமணி,சசிதரன்,ஜவாகீர்சாலி,முபீன் வாகரை பிரதேச செயலாளர், வாகரைப்பிரதேச தவிசாளர் கணேசன்(சூட்டி), பிரதி அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், காணி தொடர்பான அதிகாரிகள், மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள், மற்றும் தமிழ் முஸ்லிம் விவசாயப்பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

0 commentaires :
Post a Comment