9/04/2009

ஒத்துழையாமைதேயிலை லொறிகள் தொழிலாளரால் தடுப்பு


காவத்தை பிரதேச தோட்டப் புறங்களில் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்து காவத்தை ஒபாவத்தை தேயிலை தொழிற்சாலையில் நிர்வாகத்தால் கொழும்புக்கு ஏற்றப்பட்ட தேயிலை பக்கட்டு களை கொண்டு செல்லவிடாது தோட்டத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்றுக் காலை சுமார் 1100 தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவத்தை பிரதேச தோட்ட ங்களிலும் ஒத்துழையாமை போராட்டம் நடத்திவரும் அதேவேளை தோட்டத் தொழிற் சாலையிலிருந்து லொறியில் எடுத்துச் செல்ல முற்ப ட்டதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளுக்குச் செல்லும் குடிநீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் தொழிற்சாலை நுழைவாயிலை இழுத்து மூடியதோடு கற்பாறைகளையும், தடிகளையும் பாதையில் போட்டு மூடியுள்ளனர்.
காவத்தை இ.தொ. காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி எஸ்.விஸ்வநாதன் தொழிற்சாலைக்குச் சென்று தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தேயிலை பெக்கட்டுகளை இறக்கியுள்ளனர். தோட்ட நிர்வாகமும் இறக்குவதற்கு தடை விதிக்கவில்லை. இதன் பின் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளனர். இதேவேளை காவத்தை வெள்ளாந்துறை தொழிற்சாலையிலும் தேயிலை பெக்கட்டுகள் ஏற்றவிடாது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment