9/09/2009

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு குறித்து ஐ.ஒ.எம் உயர்மட்டக் குழுவுடன் முதலமைச்சர் சந்திப்பு.




இன்று காலை முதலமைச்சர் செயலகததில் சர்வதேச புலம்பெயர்வாழ் அமைப்பான ஐ.ஒ.எம் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
ரி.எம்.வி.பியின் முன்னாள் போராளிகளின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்பு அவர்களின் வாழ்வாதாரம் குறித்து ஐ.ஒ.எம்இன் பரந்துபட்ட வேலைத்திட்டம் முன்னளிக்கப்படவிருக்கின்றது.இவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் எதிர்காலத்தில் இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கௌரவ முதலமைச்சருக்கும் ஐ.ஒ.எம். உயர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கான வேலைத்திட்டத்தை முன்னளிப்பது குறித்தும் அவர்களின் திறமைகளை இனம்கண்டு அதற்கேற்ப தொழில் பயிற்சி வழங்கி பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களது அந்தஸ்த்தை உயர்த்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது இவ்வேலைத் திட்டத்தில் முதலமைச்சர் கொண்டுள்ள அதீத அக்கறை அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐ.ஒ.எம் பிரதிநிதிகளால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது இச்சந்திப்பில் ஐ.ஒ.எம் அமைப்பின் சார்பாக இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மொஹமட், ஐ.ஒ.எம் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் ஆகியோருடன் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அஷாத் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment