9/12/2009

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் தலைவர்கள் கைது



பாகிஸ்தானில் பிரச்சினைக்குரிய ஸ்வாட் பள்ளத்தாக்கில் கைதாகியுள்ள 5 மூத்த தலிபான் தலைவர்களை தாம் விசாரித்து வருவதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு புதிதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாம் ஏற்கனவே செயற்படத்தொடங்கி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்வாட் பள்ளத்தாக்கை கடுமையாக தாக்கி, கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து அதனை மீட்டதை அடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் உயர்மட்ட தலைவர்கள் கைதாவது இதுவே முதல் முறை.
தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் தாலிபான்களின் முக்கிய பேச்சாளரான முஸ்லிம் கானும் அடங்குகிறார்.
இன்னமும் தலைமறைவாக இருக்கும் உள்ளூர் தாலிபான் தலைவரான மௌலானா ஃபஸ்லுல்லா அவர்களின் சார்பில் இவர் அடிக்கடி பேசிவந்திருந்தார்.

0 commentaires :

Post a Comment