* 1988 - 89 கால கூட்டுக் கொலைகள்* பட்டலந்த வதை முகாம்* உமா ஓயா திட்டத்தை நிறுத்த சதி
ஐ. தே. க. தலைவரின் கடந்த காலச் செயற்பாடுகள் காரணமாக அவர் தென் பகுதியின் எதிரியாகவே தென் பகுதி மக்களால் கருதப்படுகிறார். இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் மோசமான முறையில் நிராகரிக்கப்படுவாரென அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- 1988-89 காலப் பகுதியில் தென் பகுதி இளைஞர்கள் கூட்டாக கொல்லப் பட்ட சம்பவங்களுக்கும் பட்டலத்த வதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்க மீதே குற் றஞ் சுமத்தப்படுகிறது.
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம், துறைமுகம் மற்றும் உமா ஓயா திட்டம் என்பவற்றை நிறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது 30 வருட அரசியல் வாழ்வில் அவர் எடுத்த முடிவுகள் காரணமாக, ரணில் விக் கிரமசிங்க தெற்கின் விரோதியாக கருதப் படுகிறார்.
1988-89 கால கூட்டுக் கொலைகள், பட் டலந்த வதை முகாம் என்பன காரணமாக பல்லாயிரம் தென் பகுதி மக்கள் பாதிக்கப் பட்டனர். கடந்த கால வடுக்களை தென் பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஊவா தேர்தலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறை முகம் மற்றும் விமான நிலையத்தையும் உமா ஓயா திட்டத்தையும் நிறுத்துவதாக கூறியதை தென் பகுதி மக்கள் மறக்க வில்லை. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப மக்கள் தயாராக உள்ளனர்.
தென் பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலகில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தென் பகுதி மக்களின் அபிமானத்துக்குரிய அவரை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்கின்றனர்.
அவருக்கு பாதிப்பு ஏற்ப டுவதை தென் பகுதி மக்கள் விரும்பவி ல்லை. எனவே இந்தத் தேர்தலில் தென் பகுதி வரலாற்றில் ஒருபோதுமில்லாத பெரு வெற்றியை ஐ.ம.சு.மு. பெறும்.
ஐ.தே.க. வின் தலைமைத்துவம் காரண மாக பெருமளவு ஐ.தே.க. பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அணி அணியாக அரசுடன் இணைந்து வரு கின்றனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது:-
தெற்கில் தேர்தல் நடைபெறுகிறபோதும் குருணாகலையில் அகிலா விராஜ் காரிய வசத்தை காப்பாற்றும் போட்டியிலே ஐ.தே.க. தலைவர் இறங்கியுள்ளார். ஐந்து சதம் கூட பெறுமதியில்லாத மங்கள சமர வீரவை இணைத்துக் கொண்டதால் ஐ.தே.க. தலைவருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட் டுள்ளன.
தெற்குத் தேர்தலில் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஐ.தே.க. வுக்கு இரு ஆசனங்கள் வீதம் தான் கிடைக்கும் ஜே.வி.பி.க்கு முழு மாகாணத்தில் இருந்தும் ஒரு ஆசனம் கிடைப்பது கூட கஷ்டமான காரியமாகும்.
இது வரை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஐ.தே.க. வின் வாக்குகள் 19 இலட்சத்தினால் குறை ந்துள்ளன. இந்தத்தொகை தென் மாகாண தேர்தலின் பின்னர் 23 இலட்சமாக அதிக ரிக்கும். ஐ.தே.க. வில் இருந்த பெரும் பாலான மக்கள் இன்று ஐ.ம.சு.மு. உடனே கைகோர்த்துள்ளனர்.
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க. பொது வேட்பாளர் ஒரு வரை நிறுத்த முயன்று வருகிறது. ஆனால் எவரையும் பிடிக்க முடியாது ஐ.தே.க. திண் டாடுகிறது.
0 commentaires :
Post a Comment