தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடைந்து அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டமைக்கு அந்த அமைப்பிலிருந்து தாங்கள் வெளியேறியமையே பிரதான காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெவித்தார். தான் மற்றும் கருணா அம்மான் போன்ற முக்கிய போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியமை விடுதலைப் புலிகள் இயக்கத்தை நேரடியாகவே பலவீனப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் வீரகேசரி வார வெளியீட்டுக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிக்கையில், "யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொண்டிருந்தாலும் தமிழீழக் கோரிக்கையை அவர்கள் கைவிடவில்லை. இதன் காரணமாக அந்த அமைப்பின் போக்கில் அதிருப்தியுற்ற நாம் வெளியேறினோம். இதனை ஒரு பிளவு என்றே கூறலாம். இதன் பிளவானது புலிகள் அமைப்பில் ஆட்கள் சேருவதனை அல்லது சேர்க்கப்படுவதனை வெகுவாகப் பாதித்தது. நாம் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து எவரும் புலிகள் அமைப்பில் சேரவில்லை. இது புலிகள் அமைப்பை ஆட்பலரீதியாக கடுமையாகப் பாதித்தது. இதனை நன்கறிந்து கொண்ட அரசாங்கம் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி புலிகளை அழித்து இலகுவாக அவர்களை வெற்றி கொண்டது" என்றார்
0 commentaires :
Post a Comment