தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மத்திய மாகாண சபையில் இன்று 8 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட விசேட பிரேரணை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்குத் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும். இவ்விடயம் குறித்து அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் கொண்டு வந்த, விசேட பிரேரணையை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜரட்ணம் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரேரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையை ஏகமானதாக ஏற்று நிறைவேற்றினர்.
அதேவேளை, இந்தப் பிரேரணைத் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அறிவிப்பதற்கு மத்திய மாகாண சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment