இன்று திருமலை தம்பலகாமத்தில் ரை இஸ்டாரின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக சுமார் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கிறது. ரை இஸ்டார் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் தேச பெரும தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, நஜிப் எ மஜித் மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பை து.நவரெட்ணராஜா மற்றும் மாகாண சபை ஊறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment