9/01/2009

மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய மட்டக் குழு அமைக்கும் பணி ஆரம்பம்.



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைக்கும் வேலைத் திட்டம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்கட்டமான வேலைத்திட்டம் அண்மையில் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமியக் குழுக்கள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. இன்று(30.08.09) இரண்டாம் கட்டமாக மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்படட் கிராம சேவகர் பிரிவுகளான வவுணதீவு, நாவற்காடு, கரவெட்டி, கன்னன்குடா மண்டபத்தடி, காஞ்சிரங்குடா, ஆயித்தியமலை மகிழவட்டவான், உன்னிச்சை, 8ம்கட்டை,பாவற்கொடிச்சேனை போன்ற கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமியக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இக் கிராமியக் குழுக்களுக்கான உறுப்புரிமைகளை தமிழ் மக்கள் விடுதலைப் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கிவைத்தார்.
இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முககிய பிரமுகர்கள் சமூகமளித்திருந்தார்கள். அத்தோடு இப்பிரதேச மக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டு உறுப்புரிமையினைப் பெற்றார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எட்வின் சிவல்வா கிருஸ்ணானந்தராஜா, கட்யின் தேசியப் பொருளாளர் உருத்திரா மாஸ்டர்,
கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆஸாத் மௌலானா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் உப செயலாளர் ஜெயராசி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment