9/23/2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டம் இன்று வாழைச்சேனையில்.





த.ம.வி.பு கட்சியானது தனது கொள்கைகள் எதிர்காலத் திட்டங்கள் எதிர்நோக்கி இருக்கின்ற சவால்கள் என்பவற்றை மக்களுக்கு தெளிவு படுத்துகின்ற வகையில் கட்சியின் கொள்கைகளையும் கட்சியினையும் மக்கள் மயப்படுத்தும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அதன் முதற்கட்டமாக வாகரை, வவுனதீவு போன்ற இடங்களிலும் இன்று வாழைச்சேனையிலும் பிரதேச சபை தவிசாளர் உதய ஜீவதாஸ் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் வைத்து கிராமிய மட்டத்திலான கட்சி அங்கத்தவர்களுக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டது.இன்று கோரளைப்பறங்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்;குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து கிராமிய மட்டத்திற்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அங்கத்துவர்களுக்கான உறுப்புரிமை கட்சித் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கட்சித் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி குறிப்பிடுகையில், உரிமை, தனித்துவம்,கொள்கை என்பன எமது கட்சியின் கொள்கைகளாகும் அதேபோல் சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்;சியாகவே இன்று எமது த.ம.வி.பு.கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது த.ம.வி.பு கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் இஸ்த்திரமற்ற நிலையே காணப்பட்டு வந்திருக்கின்றது. இனிவரும் காலங்களில் கட்ந்த கால அரசியல் நிலைப்பாடுகளை மாற்று வழியில் சிந்திப்பவர்களாகவும் கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான ஓர் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் அனைவருமே அக்கறையோடு செயற்பட வேண்டும் .
கிழக்கு மாகாணத்தவர்களின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அபிலாசைகளையும் பேண வேண்டும் என்ற அடிப்படையில் நாம் எமது கட்சி கொள்கைகளை வடிவமைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கிழக்கின் அரசியல் தலைமைத்துவத்திற்கு வித்திட்டவர்களாக இன்று உறுப்புரிமை பெற்றிருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினர்களும், கிழக்கினை தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு அயராது எமது கட்சியோடு இணைந்து எமது மாகாணம் வழம்பெற வைப்பவர்களாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment