9/04/2009

புலிகள்விட்ட இடத்தில் இருந்து புலம்பெயர் வியாபாரிகள் தொடரும் மாபியா நெற்வேக்


பிரான்சின் பிரபல வியாபாரியான சிறிமகால் ஸ்ரோர், ஈழநாடு போன்ற வியாபாரிகள் ஒன்றிணைந்து ஊடக இல்லமொன்றைத் திறந்திருக்கிறார்கள். புலிகளின் தோல்வியின் பின்னர் நிறுத்தப்பட்ட ஈழமுரசு விற்பனையை கையகப்படுத்த முயற்சிக்கும் முதலாளிகளின் முயற்சி இதன்பின்னணியில் உள்ளது. கடந்த வருடம் துக்ளக் பத்திரிகையை பாரிசில் எரித்த பாலச்சந்திரனும், பாஸ்கரனும் இணைந்து ஊடக இல்லம் திறப்பது கேலிக்குரியது.

நேற்று புதன்கிழமை ஊடக இல்லம் (Maison des Media - Media House) ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரபல வர்த்தகர் மதி இதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள இந்த ஊடக இல்லம், தமிழர்களின் நிகழ்கால வாழ்க்கை, வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல், தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல், அவர்களது பாதுகாப்பு மற்றும் ஊடக உரிமைகள், சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுத்தல், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பிரெஞ்சு மற்றும் அனைத்துலக செய்தியாளர்களுடனும் உறவுகளை உருவாக்குதல் (கூட்டுறவு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு). அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பிரெஞ்சு மற்றும் அனைத்துலக தொடர்புசாதனங்கள் மூலம் குரல்கொடுத்தல். ஊடகம்-ஊடகவியல் சார்ந்த உறுப்பினர்களுக்கு விசேட பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல், புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல், அதற்கான கட்டமைப்புக்கு உதவுதல் போன்ற பல்வேறு பணிகளை ஆற்றும் நோக்குடன் இந்த ஊடக இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு வெளியீடுகளையும், செய்தித் தளங்களையும் இயக்குவதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் முடிவு செய்துள்ள ஊடக இல்லம், அதன் முதல் முயற்சியாக ஈழமுரசு இதழையும் வெளிக்கொண்டு வரவுள்ளது

0 commentaires :

Post a Comment