9/03/2009

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல்.


கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் உள்ளுராட்சி அலுவலகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் குறித்த அப்பிரதேசங்களின் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்பட இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும், தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாயாடல் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் இர்ஷாத் தலைமையில் நேற்று(01.09.2009)அம்பாறையில் இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மாகாண அமைச்சர்களான விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் .உதுமாலெஃப்பை மற்றும் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


0 commentaires :

Post a Comment