சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.
உள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,
“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.
நாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,
“தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன” என்றார்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.
இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது
0 commentaires :
Post a Comment