9/23/2009

வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்களான பேராசிரியர் ஜி;.எல்.பீரிஸ் ,சுசில் பிரேமஜயந்த ,சுசந்த புஞ்சிநிலமே ,எம்.எஸ்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பசில் ராஜபக்ச உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சுனாமியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதி சேதமடைந்த நிலையில் இதனைப் புனரமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்திருந்தது.
தரம் 1 முதல் 13 வரையிலான இப் பாடசாலையில் கல்வி பயிலும் 700 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள் .முழுமையான வசதிகளுடைய நூலகம் ,விஞ்ஞான ஆயு;வு கூடம் ,கணனி ,தொழிற் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம் ,விளையாட்டு வசதிகளையுமு; இத் திட்டத்தின் கீழ் பாடசாலை கொண்டிருக்கும்
இதே வேளை ஜனாதிபதியின் வருகையை ஒட்டி வாகரைப் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது


0 commentaires :

Post a Comment