கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சில கோரிக்கைகளை முன் வைத்து நேற்று நண்பகல் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு விளையாட்டு மைதான வசதி ,போக்குவரத்து வசதி ,ஆண்களுக்கான விடுதி வசதி ஆகியன ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மாதாந்த உபகாரக் கொடுப்பனவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடுவதில் காணப்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் மாணவர்களினால் முன் வைக்கப்பட்டுள்ளன.
இன்று நண்பகலுடன் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துள்ள மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறு நிறுவனத்திற்கு முன்பாக கூடி நின்று இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பாக 3 நாட்களுக்கு முன்னதாக நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் ,
இது தொடர்பான உத்தரவாதம் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்

0 commentaires :
Post a Comment