மன்னாரில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று (25) கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பரிவின் பேச்சாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
புளியங்குளம் விடத்தல்தீவு வீதியில் நீரோடை ஒன்றை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஊழியர்களே இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ‘பெகோ’ இயந்திரத்தைக் கொண்டு நீரோடையைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தவர்களே எலும்புக்கூடுகளை மீட்டதாகவும் அவை பழுதடைந்து உக்கிய நிலையில் காணப்பட்ட தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எலும்புக் கூடுகளுடன் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பயன்படுத் இரண்டு, வெடி மருந்துகள், ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த எலும்புக்கூடுகள் புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment