முதலாளிமார் சம்மேளனத்துடனான ஏழாவது சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
பதினொரு தினங்களாக முன்னெடுக்கப்படும் இப்போரா ட்டம் நேற்று முதல் மாற்று வடிவம் பெற ஆரம்பி த்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட் டனர்.
இதேவேளை, தங்களது 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டதாக தோட்டங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்று மாலை தங்களுக்குள் சந்தித்துப் பேசின.
கொழும்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியக இருப்பதனால், அவர்களுடனான பேச்சைத் தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மிகவும் நிதா னத்துடன் ஒத்துழைத்து வருகிறார்களெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தினமொன்றுக்கு 370 ரூபா சம்பளம் வழங்கவே முதலா ளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை முற்றாக நிராகரித்த தொழிற்சங்கங்கள் 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வரை போராட்டம் தொடருமென அறிவித்துள் ளன.
என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியும் சில தொழிற் சங்கங்களும் தோட்டங்களில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றன என்றும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.
இதேவேளை, மலையகத்தில் சகல தேயிலைத் தோட் டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம் முழுவதிலும் கறுப்புப் பட்டி யணிந்து ஒத்துழையாமை போராட்டம் நேற்று சனிக் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது.
பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ். விஜயகுமாரனின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போரா ட்டம் சமய வழிபாடு மற்றும் கறுப்புப் பட்டியணிதல் ஆகிய இரு வழிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
பூஜைவழிபாடுகள் பலாங்கொடைத் தோட்டப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டு ள்ளதுடன் கறுப்புப் பட்டியணிந்து மெதுவாக வேலை செய்யும் போராட்டம் நேற்று சன்னிக்கிழமை பலாங் கொடை பெட்டிகலைத் தோட்டத்தின் சகல பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.
பதுளை மாவட்டம்
பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கறுப் புப் பட்டி அணிந்தும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தி லும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதுடன் 500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை வெற்றிபெற வேண்டுமென்று ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்தவும் திட்டமி ட்டுள்ளனர். இவ்வகையிலான மாற்று வடிவிலான போராட்டங்களை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக தொழிலாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தோட்ட திருவாகங்களினால் தொழிலாளர் களுக்கு வேலை வழங்காததோர் நிலையினையும் ஏற்படு த்த தோட்ட நிருவாகங்கள் முடிவெடுத்துள்ளன. இது போன்ற நிலை தொடரும் பட்சத்தில், தோட்ட நிருவா கிகளின் வசஸ்தலங்களுக்கான மின்சாரம் மற்றும் நீரை துண்டிப்பதுடன், தோட்டப் பாதைகளை கற்களைக் கொண்டு மறித்து விடவும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொட்ட கலை ஸ்டோனிகிளிப் மற்றும் டிரைட்டன் தோட்ட தொழிலாளர்களால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பள உயர்வு தொடர்பான பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தமது வேலைகளை பகிஷ்கரித்து விட்டு கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்திய படி தத் தமது தோட்டக் காரியாலயங்களை நோக்கி ஊர்வலமாக சென்று தமது அடையாள எதிர்ப்பினை தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment