மடகஸ்காரில் அமைக்கப் பட்டுள்ள புதிய அரசாங்க த்தை தென்னாபிரிக்க நாடு கள் ஒன்றியம் நிராகரித்து ள்ளதுடன் அந்நாட்டின் எதி ர்க்கட்சியும், இது ஒரு தலைப்பட்சமான முடிவென அறிவித்துள்ளது. கொங்கோ வில் நடைபெற்ற தென்னா பிரிக்க நாடுகளின் மாநாட் டில் மடகஸ்கார் விவகாரம் ஆராயப்பட்டபோது அங்கு அமைக்கப்பட்ட புதிய அர சாங்கத்தை மாநாடு நிரா கரித்தது.
ஜனாதிபதியாக ரஜோலி னாவும் பிரதமராக ரொயி ண்டியோவும் அறிவிக்கப்ப ட்டதுடன் 31 பேர் அமைச் சர்களாகவும் நியமிக்கப் பட்டு புதிய அரசாங்கம் அமை க்கப்பட்டது. பிரதமர் ரொயி ண்டியோ இந்த அரசாங்க த்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தென்னாபிரிக்க அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்துக்கெதிரானதென மாநாடு கூறியது மடகஸ் காரில் சென்ற மார்ச் மாதம் அரசியல் சதி நடந்தது. முன்னாள் ஜனாதிபதி ரவோ ல்மானா பதவி கவிழ்க்கப் பட்டார். ராஜோலினா இப் புரட்சியை முன்னின்று செய்தார்.
இப்புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர தென்னாபிரிக்க நாடுகளின் அனுசரணையுடன் மொஸா ம்பிக் மத்தியஸ்தம் வகித் தது. ஜனாதிபதி, உபஜனா திபதி, பிரதமர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளும் இரண்டு கட்சிகளிடையே பகிரப்பட வேண்டுமென இங்கு முடிவெடுக்கப்பட் டது.
தற்போது அமைக்கப்பட் டுள்ள அரசாங்கம் ரஜோ லினாவின் ஆதரவாளர்களு க்கே முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது. இதனால் மொஸாம்பிக் தீர்மானத்தை மீறும் வகையில் இந்த முடிவு உள்ளதால் தென்னா பிரிக்க நாடுகள் ஒன்றியம் மடகஸ்கார் அரசாங்கத்தை நிராகரித்தது.
0 commentaires :
Post a Comment