மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆறு அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் இன்று (வியாழக் கிழமை) பரீட்சார்த்தமாக இயக்கப்படவுள்ளன.
இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இருந்து செய்மதி மூலமாக இந்த முன் னெச்சரிக்கை கோபுரங்கள் இயக்கப்படவுள்ளதாக மட்டக் களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரி வின் இணைப்பாளர் கே. விமல்ராஜ் தெரிவித்தார்.
கோபுரங்களின் இயக்கத்தினைப் பரிசோதிக்கும் வகை யில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் கரை யோரப் பகுதி மக்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கல்குடா, களு வன்கேணி, கல்லடி, காத்தான்குடி மற்றும் கோட்டைக் கல்லாறு ஆகிய இடங்களில் அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த வேலைத் திட்டம் தொடர்பாக உள்ளூர் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், சமயப் பெரியார்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகி யோருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்ட பத்தில் நடைபெற்றது.

0 commentaires :
Post a Comment