9/07/2009

கிழக்கின் அடையாளச் சின்னங்களில்ஒன்றான ஓட்டமாவடிப் பாலம்


மஹிந்த சிந்தனையின் கீழான கிழக்கு அபிவிருத்தியில் ஒரு மைல் கல்லாக ஓட்டமாவடிப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தற்சமயம் பூர்த்தியடையும் தறுவாயில் உள்ளது.
மட்டு - கொழும்பு பிரதான வீதியில் கிழக்கின் நுழைவாயிற் கிராமமான ஓட்டமாவடிக் கிராமத்திற்கு மெருகூட்டிக் கொண்டிருந்த பிரித்தானியர் கால 500 மீற்றர் நீளமான இரும்புப் பாலம் அண்மைக் காலமாக பழுதடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் அன்றாட பயண நுழை கதவாக இப்பாலம் காணப்படுவதுடன் தரை வழியும், புகையிரதப் பாதையும் ஒன்றாயிணைந்த பாலமாகவும் இப் பாலம் காணப்படுவதும் இலங்கைத் திருநாட்டில் கிழக்கின் விசேடமாகும்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1924 இல் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தின் பயன் அளவிட முடியாதது. இதன் பயன்பாடு அதிகம் என்பதால் அடிக்கடி இப்பாலத்தின் புனரமைப்பு வேலைகளும் இடம் பெற்று வந்துள்ளன.

ஆயினும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய பாலத்தின் அவசியம் உணரப்பட்ட நிலையில் கிழக்கு உதயத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதியும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர்அலியின் முயற்சி காரணமாக இப்பாலத்துக்கு சரி சமாந்தரமாக புதிய இரும்புப் பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மாதுறு ஓயவின் கிளையாற்றின் மேலாக செல்கின்ற இப்பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருவதனை தற்போது காணக் கூடியதாகவுள்ளது.
இதற்காக ஸ்பெயின் நாட்டின் நிதியுதவியை அரசாங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு இதற்கென ஒதுக்கப்பட்டு கடந்த 2008 ஆரம்பத்தில் ஆரம்ப வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன. இப்பணிகளை தொடக்கிவைக்கும் நிகழ்வு அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டு உயர்மட்ட உத்தியோகத்தர்கள், தூதுவராலய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இப்புதிய இரும்புப் பாலம் அகன்ற பாலமாகவும், இரு வழிப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் ஒரே நேரத்தில் வாகனங்களது போக்குவரத்துச்செயற்பாடுகள் இடம் பெறும். புகையிரத போக்குவரத்து வழமைபோல பழைய பாலத்தினூடாகவே அமையும். அரசின் அபிவிருத்திப்பாதையில் இது ஒரு மைல்கல் என்றே கூற வேண்டும்.

0 commentaires :

Post a Comment