திஸ்ஸ நாயகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மேல் நீதிமன்றத் தீர்ப்பு ஊடகத்துறைக்கு எதிரானதல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.
இந்நாட்டில் நீதித்துறை மிகவும் சுந்திரமாக உள்ளது. அத்துறையில் எவரும் தலையீடு செய்ய முடியாது. இதற்கு அரசாங்கத்திற்கு எதிராக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கள் நல்ல சான்றுகள் என்றும் அமச்சர் கூறினார்.
திஸ்ஸ நாயக்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்பை சிலர் இந்நாட்டில் ஊடக அடக்குமுறை நிலவுவதாகத் திரித்துக் காட்ட முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்நாட்டில் ஊடக அடக்குமுறை கிடையாது. ஊடகத்துறை சுதந்திரமாக இயங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், இந்நாட்டில் நீதித்துறை மிகவும் சுதந்திரமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளின் தரத்தில் இருக்கிறது. நீதித்துறை சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது.திஸ்ஸநாயகம் ஊடகவியலாளர் தான். ஆனால், அவர் பயங்கரவாதத்திற்கு உதவி அளித்ததற்காகவே இத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஊடகத்துறைக்கான தீர்ப்பு அல்ல இது. இங்கு ஊடகத்துறை சுதந்திரமாக உள்ளது. ஊடக அடக்குமுறை கிடையாது.திஸ்ஸநாயகத்திற்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு திறந்த அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின்படிதான் மேல் நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத் தீர்ப்பு தொடர்பாக அவர் மேன்முறையீடு செய்துள்ளார்.பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1979 ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது என்றார்.
0 commentaires :
Post a Comment