9/03/2009

அவுஸ்ரேலிய உயர்தானிகருடனான உயர்மட்டக் கலந்துரையாடல்.


இன்று(02.09.2009) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் அவுஸ்ரேலியா உயர்தானிகருக்கும் இடையிலான உயர்மட்டக்க கலந்துரையாடல் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் கிழக்கு மாகாண சபையினது செயற்பாடுகள், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஜனநாயக போக்கு, மற்றும் அவுஸ்ரேலிய முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் கிழக்கு மாகாணத்தின் சிவில் பாதுகாப்பு தொடர்பாகவும் ஓர் சினேகபூர்வமான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் சோபியா மக்ரன்சி, அவுஸ்ரேலிய உயர்தானிகராலய செயலர் ஸ்ரீபன் பொஸ்ரர், மற்றும் T.M.V.P கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முதலமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஆஷாத் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment