9/02/2009

யாழ் பிரதிமேயர்பதவி முஸ்லிம்களுக்கு மறுப்பு.



யாழ். மாநகர சபை மேயராக திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா வையும் பிரதி மேயராக என். இளங்கோவையும் நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இவர்களின் பெயர் விபரங்கள் நேற்று (1) தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.
தென் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (1) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேயர், பிரதி மேயர்களுக்கான பெயர்களை ஈ. பி. டி. பி. சிபார்சு செய்திருந்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி மேயர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரியிருந்தது.

0 commentaires :

Post a Comment