9/01/2009

ஜனாதிபதி லிபியா பயணம்


லிபியாவின் 40 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று லிபியா புறப்பட்டுச் சென்றார்.
லிபிய தலைவர் கேர்னல் கடாபியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
லிபியாவின் 40 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியா சென்றிருந்த போது முன்னர் இணக்கம் காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சு வார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது

0 commentaires :

Post a Comment