ஜப்பானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி பெரு வெற்றியீட்டியது. மொத்தமாக உள்ள 480 ஆசனங்களில் 301 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி வென்றது. ஆட்சியிலிருந்த பிரதமர் ரரோ அசோவின் லிபரல் கட்சி 119 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
இதையடுத்து ஜப்பானை ஐம்பது வருடங்களாக ஆண்டு வந்த லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக மாறியது. தோல்வியை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரரோ அசோ பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஜனநாயகக் கட்சியின் தலைவர் யுகியோ ஹற்றோயாமா (வயது 62) புதிய பிரதமராகப் பதவியேற்பார். புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்ற மக்களின் மறுவாழ்வு என்பவை புதிய அரசாங் கத்துக்கு முன் உள்ள சவால்களாகும். ஜப்பானுடன் உறவுகளைத் தொடர விரும்புவதாக தென் கொரியா அறிவித்து ள்ளதுடன் பல நாடுகள் புதிய அரசாங்கத் துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள யுகியோ ஹற்றோயாமா கட்சியின் வெற்றி குறித்து வானொலியில் உ¨யாற்றினார். முன்னய அரசாங்கம் பின்பற்றிய கொள் கைகளை அடியோடு மாற்றப் போவ தில்லை.
பொறுமையாக இருந்து இக்கொள்கைக ளைப் படிக்க வேண்டும் ஆராய வேண் டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தேவைக ளையும் கருத்தில் கொண்டு இக்கொள் கைகள் சிலவற்றை மாற்றுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்படுமெனக் கூறி னார்.
மக்கள் புதிய கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் புதிய அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் பதவியேற்கவுள்ளார்.
0 commentaires :
Post a Comment