மேற்கு ஆபிரிக்காவில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலர் பலியானதுடன் 350,000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ள அனர்த்தத்தால் கானா மற்றும் புர்கினா பஸோ ஆகிய நாடுகளில் மட்டும் 32 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புர்கினோ பஸோவில் 150,000 பேருக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இந்த மழை வெள்ளத்தால் பெனின், கினியா, நைகர் மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ள அனர்த்தத்தில் இறந்தவர்கள் தொடர்பான முழுமையான விபரங்களை பெற முடியாதுள்ளதாகவும் அவ் விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் இறந்தவர்கள் தொகை பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
0 commentaires :
Post a Comment