9/07/2009

தம்பலகாமத்தில் 20 இலட்சம் ரூபா செலவில்இரு பாலங்கள் அமைக்க நடவடிக்கை

தம்பலகாமம் 97ஆம் கட்டை சிறாஜ் நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் மிக நீண்டகாலத் தேவையாக காணப்பட்ட இரண்டு பாலங்கள் நிர்மாணப் பணிகளுக்கு கிழக்கு மாகாண சபையின் (தவிசாளர் சட்டத்தரணி எச். எம். எம். பாயிஸினால் கடந்த திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தம்பலகாமம் சிறாஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள 06 வாய்க்கால் பாலம் 10 இலட்சம் ரூபா செலவிலும், அதே இடத்தில் 08 ஆம் வாய்க்கால் பாலம் 10 இலட்சம் ரூபா செலவிலும் நிர்மாணிப்பதற்கு இவ் அடிக்கல் நடப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் சபா நாயகர் சட்டத்தரணி எச். எம். எம். பாயிஸின் கோரிக்கைக்கு இணங்க, கிழக்கு மாகாண சபை, வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, வீடமைப்பு அமைச்சர் எம். எஸ். உதுமான் லெப்பை இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
இந்நிகழ்வில் தம்பலகாமம் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கே. தாலிப் அலி, மற்றும் பிரதேச சபை உறு ப்பினர் எம். ஜகுபார் ஹாஜி, தவிசாளரின் இணைப்பா ளர் ஏ. கே. பாஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விரு பாலங்களின் நிர்மாணப்பணிகள் மூலம் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.



0 commentaires :

Post a Comment