அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் அடுத்த வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. முதற்கட்டத்தின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக பணிகளுக்குப் பொறுப்பான பிரதம பொறியியலாளர் ஜானக குருகுலசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 50 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. முதலாம் கட்டப் பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு 2011 ஜனவரியில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதால் அடுத்த வருட இறுதியில் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடையும். முதற் கட்டத்தின்போது 3 பெரிய கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த முடியும். முதலாவது கப்பல் 2011 ஜனவரியில் நங்கூரமிடப்படும்.
கடலை மறித்து நிர்மாணிக்கப்பட்டு வரும் கல்வேலி பணிகளும் 90 வீதம் பூர்த்தியடைந்துள்ளன. 17 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தை தோண்டும் பணிகளும் 45 வீதம் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாம் சட்டத்தின்போது 600 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் 310 மீட்டர் நீளமான இறங்குதுறையொன்றும் அமைக்கப்படும். 600 மீட்டர் நீள இறங்குதுறை நிர்மாணிக்கும் பணிகள் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 15, 000 பேருக்கு மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
மழை காரணமாக கடலில் ஆழத்துக்குத் தோண்டும் பணிகளும் சில நிர்மாணப் பணிகளும் சற்று பாதிக்கப்பட்டுள்ளபோதும் முதற்கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
0 commentaires :
Post a Comment