கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களால் செலுத்தப்படாதிருக்கும் ஆதனவரி நிலுவையை அறிவீடு செய்வதற்கும், 2010 ஆம் ஆண்டில் அட்டவணைப்படு த்தப்படாத ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் நேற்று முன்தினம் (3) கல்முனையில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசர ணையுடன் ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாண மட்ட அரச, தனியார் செயற் குழுவின் மூன்றாவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கல்முனை மாநகர சபை சபாமண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திர காந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில்,
உள்ளூராட்சி அமைச்சினதும், முதலமைச்சரினதும் செய லாளரான செல்வி ஆர். கே. ரன்ஞனி, சுகாதார சுதேச வைத்திய, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யு. எல். ஏ. அkஸ் உட்பட மாகாண அமைச்சு அதிகாரி களும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாநாகர ஆணையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனைக்கு விஜயம் செய்த கிழக்கு முதல்வரை கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸ் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார்.
ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மூன்றா வது மாகாண மட்டக் கூட்டத்தில் ஆதனவரி நிலுவை, ஆளணி பற்றாக்குறை, திண்மக் கழிவு முகாமைத்துவம், பொதுவாசிகசாலைகளின் அபிவிருத்தி, நீதிமன்றங் களினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கிடைக்கின்ற தண் டப் பணங்கள், மத்திய அரசினால் வழங்கப்படுகின்ற பிரமாண அடிப்படையிலான நன்கொடைகள் போன்ற விரிவான விடயங்கள் ஆராயப்பட்டன. இதன் போது மாகாண சபை அதிகாரத்துக்குட்பட்ட விடயங்களுக்கான தீர்வை உடன் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கு மேல் உள்ளவற்றுக்கான தீர்வை பெற ஜனாதிபதியின் கவன த்துக்கு கொண்டு வருவதற்கும், முதலமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்துக்கான தனியான வங்கியொன்று ஆரம்பித்தல், கிழக்கிற்கான ஆதன மதிப்பீட்டுத் திணைக்களம் பதுளையில் இயங்கி வருகி ன்றது.
அதனை கிழக்கிற்கு உடன் கொண்டுவருதல், கிழக்கில் உள்ள சுற்றுலா விடுதிகளை இயங்கச் செய்து உல்லாசத்துறை வருமானத்தை அதிகரித்தல், 2010 ம் ஆண்டில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் உள்ள அட்ட வணைப்படுத்தப்படாத பதவி வெற்றிடங்களை நிரப்பு தல், கிழக்கில் இந்தியர்களினால் அத்துமீறிய வர்த்தக நடவடிக்கையைக் கட்டுப்படுத்தல், போன்ற விடயங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை விரைவில் செய்து முடிக்கவும் முதலமைச்சரினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை மாநகர பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக விசேட சந்திப்பொன்று மாநகர முதல்வர் ஹரீஸ் தலைமையிலான குழுவினருக்கும் முத லமைச்சருக்குமிடையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் கு. மகேந்திரன் உட்பட அ. அமிர்தலிங்கம், ஐ. எல். ரவூப்தீன் ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment