வடக்கு, தெற்கு நட்புக்குக் கலை, விளையாட்டு என்பவற்றின் மூலம் கைகோர்க்கும் ஓர் அற்புத நிகழ்வாக ‘கிழக்கின் முழக்கம் 2009′ கலைவிழா மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நாளை கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
காலை 8.00 மணி முதல் நடுநிசி வரை நடைபெறும் இந்தக் கலைவிழாவுக்கு கிழக்கு மாகாணசபை அனுசரணை வழங்குகிறது. இந்த நற்பணிக்கான ஊடக அனுசரணை வழங்குகின்றது ஸ்ரீ டி.வி. நிறுவனம். இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 152 நாடுகளில் தனது நிகழ்ச்சித் திட்டங்களை ஒளிபரப்பி வருகின்றது.
இந்நிறுவன பணிப்பாளர் துஷார குரேராவும் தமது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை எமக்கு வழங்குகின்றார்.
அன்றைய தினம் நீச்சல் ஓட்டப்போட்டிகள், உதைபந்தாட்டம் மற்றும் தோணி ஓட்டம் உட்பட பல்வேறு விளையட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அலங்கார காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மெஜிக் காட்சிகள் என்பனவும் விழாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குக் கேடயங்கள், பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும். இறுதியில் வாண வேடிக்கை, இசைக்கச்சேரி என்பன இடம்பெறும்.
0 commentaires :
Post a Comment