9/01/2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட க^ழியச் சிறைத் தண்டனை







ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (31) 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இனவாதத்தை தூண்டும் வகையில் ‘நோர்த் ஈஸ்டன் மன்த்லி’ எனும் சஞ்சிகையை வெளியிட்டது தொடர்பாக இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
திஸ்ஸநாயகத்துக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த 3 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமானதையடுத்து குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்டமா அதிபர் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திந்தார்.
2006 ஜுன் முதலாம் திகதிக்கும் 2007 ஜுன் முதலாம் திகதிக்கும் கிடைக்கப்பட்ட காலப் பகுதியில் நோர்த் ஈஸ்டர்ன் மன்த்லி சஞ்சிகையை வெளியிட்டமை, குறித்த சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டமை, மற்றும் சஞ்சிகையை வெளியிட நிதி திரட்டியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்துக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.
மேற்படி வெளியீட்டினூடாக அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தவும் இனவாதத்தை தூண்டவும் முயற்சி செய்யப்பட்டிருந்தது. இந்த சஞ்சிகையை வெளியிட அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டிருந் ததாக வழக்குத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜித யாப்பா புத்தக நிலைய பொது முகாமையாளர் அளித்த வாக்கு மூலத்தில் நோர்த் ‘ஈஸ்டர்ன் மன்த்லி’ சஞ்சிகையின் 50 பிரதிகள் விற்பனைக்காக குறித்த அமைப்பினூடாக கையளிக்கப்படுவதாகவும் அவற்றுக் கான பணம் திஸ்ஸநாயகத்துக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் சார்பாக சுதர்சன டி சில்வா ஆஜரானார். சகல தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி, திஸ்ஸநாயகத்துக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


0 commentaires :

Post a Comment