துருக்கியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக 18 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். தலைநகர் இஸ்தான்புல்லில் மட்டும் 12 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்தான்புல்லிலுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் வெள்ளத்தில் கார்கள் பல அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அக் கார்களின் சாரதிகள் வெளியேற முடியாத நிலையில் கார்களுக்குள் சிறைப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
0 commentaires :
Post a Comment