9/02/2009

யாழ். நீர்ப்பாசன திட்டங்களை செயற்படுத்த ரூ. 138 மில். செலவு


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன திட்டங்கள் அனைத்தையும் செயற்படுத்துவதற்கென 138 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வழுக்கை ஆறு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ஆற்றின் பிரதான வாய்க்கால் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை படத்தில் காண்க.

உப்பாறு களப்பு திட்டத்தின் கீழ் அரியாவை அணை மற்றும் வடமராட்சி கபுது அணைக்கட்டு நிர்மாணப் பணிகளுக்கென 125 மில்லியன் ரூபா செலவிடப்படவுள் ளது. உப்பு நீரை வேறுபடுத்தும் நன்னீர் திட்டத்தின் கீழ் 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கு 28.66 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 3.4 மில் லியன் ரூபா செலவில் யாழ். குடாநாட்டிலுள்ள சிறிய குளங்களின் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.
யாழ். மாவட்டத்திலுள்ள வழுக்கை ஆறு நீர்ப்பாசனத் திட்டத்திற்கென 103.99 மில்லியன் ரூபாவை செலவு செய் யவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் வழுக்கை ஆற்றின் பிர தான நீர்ப்பாசன வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டும் உள் ளது என ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment