9/12/2009

வவுனியா நிவாரண கிராமம்10 ஆயிரம் பேர் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த சுமார் 10,000 பேர் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நேற்று சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வட மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி என்பவற் றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது 86 பஸ் வண்டிகளில் 10,000 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
கதிர்காமர், இராமநாதன், அருணாசலம், வலயம் 5, வலயம் 4 போன்ற நிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அனுப்புவதற்கு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தி லிருந்து பஸ் வண்டிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
யாழ். நகருக்குச் செல்லும் பஸ் வண்டிகளில் 6838 பேரும், திருகோணமலைக்குச் செல்லும் பஸ் வண்டிகளில் 2170 பேரும், அம்பாறைக்கு 274 பேரும், மட்டக்களப்புக்கு 638 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய நிலையில் நிவாரணக் கிராமங்களில் இது வரை காலமும் தங்கியிருந்த 74 பேரும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி 9994 பேர் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, மீன்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம, அமைச்சர் சரத் குமார குணரட்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, மட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மீன்குடியேற்றத்திற்காக செல்லும் மக்களுக்கென உலர் உணவு வகைகள், சமையல் பாத்திரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
நேற்றுக் காலை 10.30க்கு ஆரம்பமான நிகழ்வின்போது பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மங்கள விளக் கேற்றி மீள்குடியேற்ற வைபவத்தை ஆரம்பித்துவைத்தனர்.
விடுவிக்கப்பட்டவர்களை குறித்த மாவட்டங்களின் அரச அதிபரின் பிரதிநிதிகள், திட்டப்பணிப்பாளர்கள், கிராம சேவையாளர்கள் வவுனியாவில் வைத்து பொறுப் பேற்றனர்.
நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மக்களை விடுவி க்கும் இரண்டாவது வைபவம் இதுவாகும் என அதி காரிகள் தெரிவித்தனர். (ள)


0 commentaires :

Post a Comment