தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் பிராந்தியக்காரியாலயம் மட்டக்களப்பு கல்லடியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் தனியொரு மாகாணமாகும். தனித்திருக்கின்ற எமது மாகாணத்தை சகல வழிகளிலும் அபிவிருத்தியடையச் செய்வது இம் மாகாணத் தில் வாழ்கின்ற அனைவரினதும் தலையாய கடமையாகும். இவ்வாறான ஓர் நிலையில்தான் நாம் எதனைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாணத்தை தனியாகப் பிரித்தோமோ அதனை அடைய முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் இன்று திறநது வைக்கப்பட்டிருக்கின்ற இப் பிராந்தியக் காரியாலயம் ஆரம்பத்தில் திருகோணமலையில்தான் இருந்தது. ஆனால் இன்று வடகிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கின் மத்தியாக மட்டக்களப்பு அமைந்திருப்பதனால் அதனை மட்டக்களப்பில் நிறுவ வேண்டும் என அமைச்சர் அதாவுல்லா அவர்கள் எடுத்த இந்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியதாகும். அத்தோடு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலே அதிகளவிலான தண்ணீர் பிரச்சினைகளை பெரும்பாலும் எதிர் நோக்குகின்றவர்கள் மட்டக்களப்பு வாழ் மக்களாவர். மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசம் அதேபோல் அம்பாறையின் எல்லைப் பிரதேசம் இவ்வாறான பிரதேசங்களில் கோடைகாலங்களில் மட்டுமன்றி எந்நேரத்திலும் குடிநீர் பிரச்சினை இருந்து கொணடே இருக்கிறது. இவற்றை யெல்லாம் தீர்ப்பதற்கான ஓர் இலகு வழியாக இது அமையும் என நான் நம்புகிறேன்; எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், கிழக்கின் அபிவிருத்த்p என்கின்ற போது சமூக அபிவிருத்தி மிக முக்கியமானதாகும். அதாவது இனங்களுக்கிடையிலான சமூக உறவுகள் அபிவிருத்தி அடைய வேண்டும். அவ்வாறான சமூக அபிவிருத்தி ஏற்படுத்தப்படுகின்ற போதுதான் நாம் எதிர் பார்க்கின்ற ஏனைய அபிவிருத்திகள் தங்கு தடையின்றி நடைபெறும். இன்று கிழக்கு மாகாணத்தில் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றது. அதற்கு இப் பிராந்தியக் கரியாலயம் திறநத்து சிறந்த ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது தமிழ் அரசியல் வாதிகள் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் அதேபோல் மஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் பிரதேசங்களுக்குச் சென்று நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் ஊடாக இனங்களுகிடையிலான உறவுகனைப் பலப் படுத்தமுடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களும் மற்றும் சிறப்பு அதிதிகளாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ். உதூலெவ்வே, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சு சபையின் தவிசாளர் டாக்டர் உதுமாலெவ்வே, மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment