8/21/2009

ஊவா முதல்வராக சiந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு





ஊவா முதல்வராக சiந்திர சத்திய பிரமாணம்: செந்தில் உட்பட 4 அமைச்சர்களும் பதவியேற்பு
(மர்லின் மரிக்கார்)
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சiந்திர குமார ராஜபக்ஷ, நேற்று ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றஇவ் வைபவத்தின் போது ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சiந்திர குமார ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குரக்கன்சால்வை ஒன்றையும் அணிவித்தார்.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாகாண ஆளுநர் நந்தா மெத்யூவ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதே நேரம் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் சகலரும் இவ் வைபவத்தில் ஜனாதிபதி முன்னிலையில் கூட்டாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.
* சiந்திர குமார ராஜபக்ஷ முதலமைச்சர், நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, கல்வி, உள்ளூராட்சி மன்றங்கள், கலாசார விவகாரம், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.
* செந்தில் தொண்டமான் - இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமூக சேவைகள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, மின்சக்தி, எரி சக்தி, புடவைக் கைத்தொழில், சிறு கைத் தொழில்துறை ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.
* ஏ.எம். புத்ததாச - சுகாதாரம், உண்ணாட்டு வைத்தியம், சிறுவர் பாதுகாப்பு, நன்நடத்தை, மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.
* அனுர ரவீந்திர விதான கமகே - விவசாயம், கமநல அபிவிருத்தி, கால் நடை வளர்ப்பு, நன்னீர் மீனவ கைத்தொழில், சுற்றாடல் மற்றும் சுற்றுலா ஆகியதுறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்.
* ஆர்.எம். குமாரசிறி ரத்நாயக்கா - நெடுஞ் சாலை அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல், நுகர்வோர் விவகார, கூட்டுறவு, உணவு வழ ங்கல் மற்றும் விநியோகம் என்பவற்றுக்குப் பொறுப் பான அமைச்சர்.
இதேவேளை மாகாண சபை உறுப்பினர்களான டாக்டர் ரோகண புஷ்பகுமாரவை சபைத் தலைவராகவும், சாலிய சுமேதவை உப தலைவராகவும், ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ராஜா பந்துசேனவையும், சபை முதல்வராக விஜித பேருகொடவையும் மாகாண சபையின் முத லாவது அமர்வின்போது தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இவ் வைபவத்தின் போது ஆலோசனை முன் வைத்தார்.

0 commentaires :

Post a Comment