இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தனது புதிய அமைச்சரவைக்காக இரண்டு பெண்களை முன் மொழிந்துள்ளார். மேலும் பலரை முன் மொழிய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இரானில் பெண்கள் இதற்கு முன்னர் துணை அதிபர்களாக பதவி வகித்துள்ள போதிலும் இஸ்லாமியக் குடியரசு வரலாற்றில் பங்குகொள்ளும் முதலாவது பெண் அமைச்சர்கள் என்ற அந்தஸ்தை இவர்கள் இந்த புதிய நியமனத்தின் மூலம் பெறுவார்கள்.
இவ்வாறு மும்மொழியப்பட்டுள்ள இரண்டு பெண்களும் கடுமையான பழமைவாதிகள் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களில் ஒருவர், பெண்களின் உடைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த உறுதியான அமலாக்கத்திற்கு ஆதரவினை தெரிவத்தவர் ஆவார்.
மற்றையவர், இரானில் ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும் சிகிச்சையளிக்கக் கூடிய விதத்தில் தனித்தனியான சுகாதார பராமரிப்பு அவசியம் என முன்னர் வலியுறுத்தியவர் ஆவார்.

0 commentaires :
Post a Comment