ஆகஸ்ட் 11 ம திகதி புலிகளின் நர மாமிச வேட்டையில் ஏறாவூரில் தூக்கத்திலிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 104 முஸ்லிம்கள் ஏறாவூர் 3 ம் 6ம் குறிச்சியிலும் சதாம் ஹுசைன் நகரிலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் பின்னர் தொடர்ந்த பல புலிகளின் ஆகஸ்ட் கொலைகள் இம்மாதத்தை ” கருப்பு ஆகஸ்ட்” என நினைவு கூறவைக்கிறது. “கருப்பு ஜூலை” நினைவுகளை தமிழர்கள் நினவு கூருவதுபோல் முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் தமிழர்களின் பயங்கரவாத சமூக விரோத சக்திகளின் வெளிப்படாக அமைகிறது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்த கொடூரம் நடந்தது..
காத்தான்குடி சம்பவம் நடந்த சிலநாட்களில் அன்றைய நாடாளுமன்ற அடிப்படை மனித உரிமைகளுக்கான குழுவினர் (( The committee of Parliamentarian for Fundamental and Human Rights ) ஆகஸ்ட் மாதம் 8 ம திகதி வெளியிட்ட அறிக்கையில் அக்குழுவின் செயலாளரான இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டு வெளியிட்ட அந்த அறிக்கை ” வட கிழக்கில் வாழும் முஸ்லிம் தமிழ் சிங்கள மக்களின் பாதுகாப்புக்குறித்து அரசை குற்றம் கண்டு உடனடியாக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அப்பாவி மக்களின் நெருக்கடி நிலை குறித்தும் கவலை தெரிவித்திருந்தது.. புலிகளின் சகல இன மக்களின் மீதான அக்கரைப்பற்று தொடக்கம் காத்தான்குடி படுகொலைகள் வரை கண்டித்திருந்தது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் நடந்த ஏறாவூர் படுகொலை போதிய பாதுகாப்பினை அரசு வழங்கவில்லை என்பதன் விளைவாகவே நிகழ்ந்தது. தொடாச்சியாக புலிகளின் பல படுகொலைச சம்பவங்கள் கிழக்கிலே இடம்பெற்றன.
சுகதாக்கள் .தினமாக ஆகஸ்ட் 3 ம திகதி சென்ற கிழமை நினைவு கூரப்பட்டதுபோல் முழுமையாகவே இம்மாதமே முஸ்லிம்களின் துயர நினைவுகள சுமந்த மாதமாகும். காத்தான்குடி படுகொலை தொடர்பில் அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றய ஈரோஸ் எம். பியான சேகு தாவூத் பசீர் இகொலையின் சூத்திரதாரிகளை நோகாமல் ” காத்தான்குடியில் கொலை செய்யப்பட்ட மக்கள் தங்களுடைய உயிர்களை மட்டும் இழக்க வில்லை பள்ளிவாசலுக்கு வெளியில் இருந்தவர்கள் பள்ளிவாசல் தாக்கப்பட்டதால் தங்களது மத உணர்வுகளை இழந்திருக்கிறார்கள் .” என்று கூறி இருந்தார்.
இந்தப்படுகொலைகளின் தொடர்ச்சி அக்குரஸ்ஸ பள்ளியில் புலிகளின் இறுதி வரை தொடர்ந்திருக்கிறது. கி.பி 8 ம நூற்றாண்டளவில் அராபியர்களின் முதல் குடியேற்றம் நிகழ்ந்த இடமாக வரலாறு குறித்துறைகின்ற பேருவேளை நகரில்- பள்ளிவாசலில்- இடம்பெற்ற மத உட்சண்டை கொலைகள் மறுபுறம் இப்போது முஸ்லிம் சமூகத்தில் மத வன்முறைக்கு இனிமேல் தங்களையும் குறை கோரும் கொடிய நிலைக்கு உதரணமாக உள்ளதா?. புத்தளம் பள்ளிவாசல் படுகொலை உருவாக்கிய எதிரலை இன்று உள்வீட்டில் கூட புகை விடத் தொடங்கியுள்ளதா?
0 commentaires :
Post a Comment