தேர்தல் கண்காணிப்பு அமைப்பான 'பவ்ரல்' அமைப்பின் ஸ்தாபகர் கிங்ஸ்லி ரொட்ரிகோ நேற்றைய தினம் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அறிமுகப்படுத்தும் எண்ணக் கருவை கிங்ஸ்லி ரொட்ரிகோவே முதலில் இலங்கையில் அறிமுகப்படுத்தினார். 55 வயதான கிங்ஸ்லி ரொட்ரிகோ பிரபல சமூக சேவையாளரும் ஆனந்தா கல்லூரி பழைய மாணவருமாவார்.கடந்த ஆறு மாத காலமாக இவர் நோயினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரது பூதவுடல் பொரளை ஜயந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 20ஆந் திகதி பொரளை கனத்த மயானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment