மட்டக்களப்பு வாகரைப் பகுதி மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கடற் றொழில் நீரியல் வள அமைச்சு தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடகச் செயலாளர் யூலியன் ஞானப் பிரகாசம் தெரிவித்தார்.
இதன்படி வாகரைப் பகுதி மீனவர்களின் வசதி கருதி மினி ஐஸ் கட்டி உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதுடன் பிடிக்கப்படும் மீனை பாதுகாப்பாக வைத்திருந்து சந்தைப்படுத்த வசதியாக குளிரூட்டி வாகனங்களையும் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பெற்றுக் கொடுக்கவும், மீன்பிடி படகுகள் தரிக்கும் நங்கூரமிடும் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் உடகப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
இத்திட்டத்தின் கீழ் அமைச்சர் முரளிதரனின் வேண்டுகோளில் மூன்று குளிரூட்டி வாகனங்கள் சமீபத்தில் வாகரையில் வைத்து இப் பகுதி மீனவர் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
அமைச்சர் முரளிதரன் இந்த குளிரூட்டி வண்டிகளை மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் சம்பிரதாயபூர்வமாக வையளித்தார். இந் நிகழ்வில் தேசிய நல்லிணக்க அமைச்சின் மக்கள் தொடர்புச் செயலாளர் எஸ். ரஞ்சன், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப் பணிப்பாளர் எஸ். ரீ. ஜோர்ஜ் உட்பட பல அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
0 commentaires :
Post a Comment