போட்டி, பொறாமை இல்லாத எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்குவதில் பாடசாலைகள் பாரிய பங்களிப்பை மேற்கொண்டு வருவதாக கிழக்கு முதலமைச்சுச் செயலகத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரியும் ரி.எம்.வி.பி. கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான திருமதி யூடி தேவதாஸன், திருகோணமலை புனித பிரான்ஸிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போது குறிப்பிட்டார்.கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பி.ஐ. நோயல் பீரிஸும் அதிதியாகக் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அதிபர் ஆர். ஜெறோம் தலைமையில் அதிதிகள் அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர். தேசியக் கொடி, பாடசாலைக் கொடி ஆகியன அதிதிகள், அதிபர் ஆகியோரினால் ஏற்றிவைக்கப்பட்டன.
பாடசாலையில் தலைமை மாணவி பின்னர் ஆசிரியையாகப் பணிபுரிந்த தனது அனுபவங்களை நினைவுகூர்ந்த திருமதி யூடி தேவதாஸன், நாட்டை வழிநடத்தும் எதிர்காலத் தலைமைத்துவத்தின் பயிற்சிக் களமாகவே பாடசாலைகள் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
மாகாணக் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நோயல் பீரிஸ் பேசும்போது;
நல்லொழுக்கமும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்ட எதிர்கால சமுதாயம் பாடசாலைகள் மூலமே உருவாகிறது என்று குறிப்பிட்டார். மாணவ முதல்விகளுக்கு சின்னத்தை திருமதி யூடி தேவதாஸன் சூட்டினார். மாணவ முதல்வர்களுக்கு இணைப்புச் செயலர் நோயல் பீரிஸ் சின்னங்களைச் சூட்டினார். அதிபர் ஜெரோம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது

0 commentaires :
Post a Comment